Home                |                About Us                |                Courses                |                Gallery                |            Contact Us
 
  கல்லூரியின் நோக்கங்கள்  
 

           சிறுபான்மையோரான இஸ்லாமியர், கிறிஸ்த்தவர், இந்துகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் நலனுக்காகவும், பெண்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அதன் மூலம் பெண்களின் பொருளாதாரத்தைப் பெருக்கவும் வரதட்சனை கொடுமையை அகற்றவும் நமது இந்திய தேசத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கிட அனைத்து பிரிவு மக்களுக்கும் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கவும் எல்லோருக்கும் மருத்துவ வசதி கிடைக்கப் பெறுவதும் கல்லூரியின் நோக்கமாகும்.

கல்லூரியின் மாணவர்களுக்கான சேவைதிட்டங்கள்

           ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இலவச கல்வி, இலவச சீருடை மற்றும் தங்கும் விடுதி இலவசமாக அளிக்கப்படுகிறது. மாணவர்கள் பயிலும்போதே பகுதி நேர வேலைவாய்ப்பு வாங்கித்தருதல், பயிற்சி முடித்தவுடன் 100% வேலைவாய்ப்பு வாங்கி தருவதில் எங்கள் கல்லூரி தென்மாவட்டங்களில் மிகச் சிறந்த கல்லூரியாக திகழ்கிறது.

கல்லூரியின் பொது சேவைகள்

                  கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு படிப்புமட்டுமின்றி பொது சேவையில் மற்றும் நாட்டின் மீது பற்று வரவேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் அறக்கட்டளையின் மூலம் கல்லூரியில் பயிலும் மாணவர்களை கொண்டே இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் இலவச பரிசோதனை மருத்துவ முகாம்கள், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் போது பாதிக்கப்பட்ட பகுதிக்கே சென்று தேவையான உதவிகளை செய்வது அதுமட்டுமின்றி ஊனமுற்றோர், கண்தெரியாத குழந்தைகளுக்கு இலவச வாகனங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்குதல் போன்ற பொது சேவைகளை செய்து வருகின்றோம். இந்த பொது சேவைக்காக பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 50க்கும் மேற்பட்ட விருதுகளை எங்கள் கல்லூரிக்கு வழங்கியுள்ளது.

* ஏழை எளியோருக்கு கல்விக் கண் திறப்பதே பிறதான மந்திரமாக கொண்டு எங்கள் கல்லூரி செயல்பட்டு வருகின்றது.

 
     
developed by MaduraiSoft.com | +91 999 482 4771